Breaking News

வட்டி விகிதம் அதே அளவில் நீடிக்க RBI முடிவு- வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும்

மும்பை:

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி ஏழாவது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாமல் அதே அளவில் நீடிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கியின் வங்கி வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும்.


சர்வதேச இந்திய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இப்பொழுது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்று ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி முடிவு செய்தது கமிட்டி உறுப்பினர்கள் 6 பேரில் 5பேர் வட்டி விகிதத்தை மாற்றம் இல்லாமல் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலைப்பட வேண்டும் வளர்ச்சி விகிதம் மாற்றம் இல்லாமல் தொடர வேண்டும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய பொருளாதாரத்தில் எந்த வார்த்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த விடாமல் தவிர்க்க வேண்டும் இதற்கு வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி முடிவு செய்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி அமைத்த இவ்வாறு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இராது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 9.5 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மே மாதம் 6.3 சதவீதமாக உயர்ந்தது. அடுத்து வரும் காலத்திலும் பணவீக்கம் அதே அளவில் நீடிக்கக் கூடும்.

கடந்த ஜூன் மாதத்தில் நாணயக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நடைபெற்ற பொழுது இந்திய பொருளாதார நிலை இருந்ததை விட இப்போது சிறப்பான நிலையில் உள்ளது. அதற்காக நம்முடைய எச்சரிக்கையை நாம் கைவிட தேவையில்லை மூன்றாவது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக நம்முடைய தேவை உயர்ந்து வருகிறது ஆனால் நம்முடைய அடிப்படை நிலைகள் இன்னும் பலவீனமாகவே இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.



No comments

Thank you for your comments