Breaking News

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - பிரதமர் மோடி

புதுடெல்லி:

விளையாட்டுத்துறைக்கான ராஜிவ்காந்தி ‛கேல் ரத்னா' விருதின் பெயர், நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று ‛மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா' என மாற்றப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, உயரிய விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு, ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவரிடமிருந்து வீரர்கள் பெற்று கொள்வார்கள்.

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் படத்துடன் ‛கேல் ரத்னா'  விருதின் பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

‛கேல் ரத்னா‛ விருக்கு, மேஜர் தயான் சந்தின் பெயரை சூட்ட வேண்டும் என நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள், எனக்கு கோரிக்கைகள் அனுப்பியிருந்தனர். அவர்களின் கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ‛கேல் ரத்னா' விருதானது, இனிமேல், ‛மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா' விருது என அழைக்கப்படும்.

ஜெய்ஹிந்த்.

இவ்வாறு, டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

2018ல் மீராபாய் சானு, கேல் ரத்னா விருது வென்றபோது


No comments

Thank you for your comments