Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

சென்னை :

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்து ரூ.875க்கு விற்பனையாகிறது.


கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.  சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 4ம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25ம் தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1ம் தேதி 25 ரூபாய் உயர்த்தினார்கள்.

இவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் 125 ரூபாய் விலை உயர்த்தினார்கள். ஏப்ரல் 1ம் தேதி சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

இதற்கிடையே 3 மாத காலத்திற்கு பின் கடந்த மாதம் சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.  

இந்நிலையில் மீண்டும் இன்று  சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ரூ.850.50- லிருந்து ரூ.875.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.610 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை ஒரே ஆண்டில் ரூ. 265 அதிகரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 875.50க்கு விற்பனை ஆகிறது.

சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.


No comments

Thank you for your comments