ஸ்ரீநகர் லால் சவுக்கில் மொகரம் ஊர்வலத்திற்கு தடை விதிப்பு
ஸ்ரீநகர் :
மொகரம் பண்டிகையை ஒட்டி ஸ்ரீநகரில் லால் சவுக் உள்ளிட்ட இடங்களில் ஷியா வகுப்பினர் ஊர்வலம் செல்வதற்கு அரசு தடை விதித்தது. தடையை மீறி லால் சவுக்கில் கூட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர் லால் சவுக்கில் முகரம் பண்டிகைக்காக ஊர்வலம் செல்கிறவர்கள் கூட்டம்கூடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதுமட்டுமல்ல செவ்வாய்க்கிழமை காலை முதலே அங்கு தடைகள் எழுப்பப்பட்டன சுருள் முள் கம்பிகள் சாலையில் நிறுத்தப்பட்டன. அவற்றை மீறி லால் சவுக் பகுதியில் நுழைந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
1989ஆம் ஆண்டிலிருந்து லால்சவுக் பகுதியில் மொகரம் ஊர்வலத்தை அனுமதிப்பதில்லை. ஆனால் ஷியா வகுப்பினர் பெரும் எண்ணிக்கையில் உள்ள பகுதிகளில் பெரிய ஊர்வலங்களை போலீசார் தடை செய்வதில்லை.
சென்ற ஆண்டு மொகரம் ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தகுந்தது.
No comments
Thank you for your comments