75வது சுதந்திர தினத்தை தொடர்ந்து 27 வது மாபெரும் ரத்த தான முகாம்
காஞ்சிபுரம்:
ஒலிமுகமதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை தொடர்ந்து 27 வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையில் காஞ்சிபுரம் கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ அணி சர்புதீன் முன்னிலையில் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் பலதரப்பட்ட பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
இவ் அமைப்பினர் வருடத்திற்கு 4 முறை ரத்ததான முகாம் நடத்தி அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொடையாக வழங்கிவருகின்றன. இவர்கள் பேரிடர் காலத்திலும் கோரானா நோய் தொற்று காலங்களிலும் தனிப்பட்ட 108 இலவச ஆம்புலன்ஸ் மூலமாகவும் பலருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.
இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் கிளை சார்பாக 2006 ஆம் ஆண்டு முதல் 10 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த 25க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர், மருத்துவ இணை இயக்குனர் என உயர் அதிகாரிகளின் கையொப்பமிட்ட சான்றிதழ்யை டாக்டர் தாமரை மங்கை ரத்த வங்கி மருத்துவரால் வழங்கப்பட்டன.
பல்வேறுபட்ட நிவாரண பணிகளை மேற்கொண்டு அவற்றை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில நிர்வாகிகளும் பாராட்டியும் சான்றிதழ்களை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் கிளை சார்பாக தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் அப்துல்லாஹ், காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ அணி சர்புதீன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அன்சாரி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், ஜமாத் கிளை உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments