Breaking News

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி இன்று ஆலோசனை

சென்னை, ஆக.9-

பள்ளிகளை திறப்பது பற்றி முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.



தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி அன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு கருத்துக்களை கேட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, பள்ளிகளை திறப்பது பற்றி முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார். பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments