Breaking News

உ.பி., தேர்தலை வெல்ல பாஜக மெகா திட்டம்!

புதுடெல்லி:

அடுத்தாண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் மெகா திட்டம் ஒன்றை அக்கட்சித் தலைமை வகுத்துள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆளும்கட்சியாக உள்ள யோகி அரசு மீது அம்மாநில மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து குழந்தை உள்பட 3 பேர் பலி இதனால், தேர்தலுக்கு முன்னர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.

பாஜக வலுவாக இருப்பதாகக் கருதப்படும் மாநிலங்களில் மிக முக்கியமானது உத்தரப் பிரதேசம். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உபியில் மட்டும் பாஜக 62 இடங்களை கைப்பற்றியது. எனவே, அடுத்து 2024 மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் டாப் குறியில் ஒன்றாக இருக்கும்.

2024 மக்களவை தேர்தலை மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அடுத்தாண்டு உபியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதைக் குறிவைத்து பாஜக அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்கத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் தேர்தலுக்கு முன் கட்சியை மீண்டும் வலுப்படுத்திவிடலாம் என்றே பாஜக தலைமை நம்புகிறது.

களத்தில் யோகி எந்தளவு ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிந்து பாஜகவின் மூத்த தலைவர் பி.கே. சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் தனித்தனியாக தங்கள் ரிப்போர்ட்டை தலைமை அனுப்பினர். அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியது பாஜக தலைமை.

குறிப்பாக, உத்தரப் பிரதேச தேர்தலைப் பிரதமர் மோடி தனது இமேஜ் விஷயமாகக் கருதுகிறார். உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து தான் மோடி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இதனைத் தனது இமேஜுக்கு விடப்பட்ட சவாலாகவே கருதுகிறார். இதனால் தான் மோடியின் நெருக்கமான தளபதிகளில் ஒருவராக அறியப்படும் முன்னாள் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் சர்மா உத்தரப் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். 

மோடிக்காக தனது ஐஏஎஸ் பதவியையே ராஜினாமா செய்தவர் தான் அரவிந்த் குமார் சர்மா. மேலும், அவர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  உத்தரப் பிரதேச மக்கள்தொகையில் சுமார் 10 முதல் 14% வரை பிராமணர்கள். இதனால் அரவிந்த் குமார் சர்மாவின் வருகை வாக்குவங்கியை வலுப்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று தொடங்கி அடுத்தாண்டு குடியரசு தினம் வரை தொடர் கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஆறு மாத காலத்தில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோரை கவரும் வகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டத்தையும் பாஜக வகுத்துள்ளது.

பாஜகவின் திட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் கூட்டங்களை நடத்தத் திட்டம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாகச் சுதந்திர தினத்திற்கு முன், விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சிகளையும் அவர்களின் சிலைகள் க்ளீன் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 7 வரை பூத்களை வெல்வோம் என்ற தொடரே கூட்டங்களை பாஜக நடத்தவுள்ளது. 

செப்டம்பர் 25ஆம் தேதி பாரதிய ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீன்தயாள் உபாத்யாயின் பிறந்த இன்று மிகப் பெரியளவில் கொண்டாடவும், அதன் பிறகு தேர்தல் அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. 

இப்படி பாஜகவின் திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக உள்ளடக்கி நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கட்சியை வலுப்படுத்த முடியும் என்பதில் பாஜக தலைமை நம்பிக்கையாக உள்ளது. இவை உபியில் சற்றே சரிந்துள்ள பாஜகவின் இமேஜ்ஜை மீட்க உதவுமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments