ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில்... முதலமைச்சர் படத்தை வைக்காததை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு
சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை வைக்காததை கண்டித்து மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தனது பகுதிக்கு நிதி ஒதுக்காதை கண்டித்து அதிமுக உறுப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த தலைவர் முனியாண்டி அறையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைக்காததை கண்டித்து உறுப்பினர் பெரும்பச்சேரிமுருகன் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆணையர் சாந்தி உத்தரவின்பேரில் உடனடியாக ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அலுவலக அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் சண்முகம் தனது பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் ஒன்றியக் குழுத் தலைவர் முனியாண்டி தனது பகுதியை புறக்கணிப்பதாகவும் அதே நேரத்தில் தனது பகுதிக்கு அதிக நிதியை ஒதுக்குவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிமுக உறுப்பினரே அதிமுக தலைவரை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments
Thank you for your comments