அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கால்நடை சுகாதார முகாம்கள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை
தமிழ்நாட்டில் கால்நடைகளின் நலனை பாதுகாக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ரூ.7 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.
2021 - 2022ம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரி்ககைகள் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.
மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளதன் விவரம்:
தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவி செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க ரூ. 2 கோடிநிதி ஒதுக்கீட்டில் 50 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்
தர்மபுரி மாவட்டத்தில் திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
கால்நடைகளின் நலனை பாதுகாக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ரூ.7 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.
தென்மாவட்டங்களுக்கு விலங்கு வழி பரவும் நோயறி ஆய்வகம் மற்றும் சுகாதார தளம் திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.1 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.
ரூ. 50 கோடி செலவில் சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும்.
என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments