Breaking News

வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகள்

சென்னை

விவசாயிகளுக்குத் தரமான வேளாண் இடுபொருட்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் செய்து தரப்படும், கரூர், நாகை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும் என வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

2021 - 2022ம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத் துறை மானியக் கோரி்ககைகள் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

விவசாயிகளுக்குத் தரமான வேளாண் இடுபொருட்கள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் செய்து தரப்படும் என வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். விவரம் வருமாறு:

200 SC/ST விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய நுண்ணீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

நெல் உற்பத்தியை உயர்த்த 25000 ஏக்கரில் துத்தநாக சல்பேட் & ஜிப்சம் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3கோடி ஒதுக்கப்படும்.

தோட்டக்கலைக் கருவிகள் & உபகரணங்கள் வாங்குவதற்கு 8654 விவசாயிகளுக்கு 50% பின்னேற்பு மானியமாக ரூ.2.65 கோடி வழங்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சென்னை , கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் ரூ.8 கோடி செலவில் சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்

250 மெட்ரிக் டன் கொள்ளளவில் வேளாண் விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகள் பூளவாடி (திருப்பூர்), சிதம்பரவிடுதி (புதுக்கோட்டை), எருமப்பட்டி (நாமக்கல்), பர்கூர் (ஈரோடு) ஆகிய இடங்களில் ரூ.2 கோடி செலவில் கட்டப்படும்.

கரூர், நாகை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும்.

இவ்வாறு, வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

No comments

Thank you for your comments