Breaking News

நாடாளுமன்றத்தை ஆணவத்தால் அவமதிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்... பிரதமர் மோடி கடும் விமர்சனம்

புதுடெல்லி:

மத்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நாடாளுமன்றத் துவங்கும் முன்பு செவ்வாயன்று காலை நடத்தியது.


கூட்டத்தில் பங்குகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க் கட்சி உறுப்பினர்களை மிகவும் கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆவணங்களை பறிப்பதும் அதனை கிழித்து மறுபடி அவையில் வீசுவதும் கடுமையான குற்றங்கள் இந்த குற்றங்களுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வருகிற மாதிரி தோன்றவில்லை அதற்கு பதிலாக அவர்கள் ஆணவத்தோடு தொடர்ந்து நடந்து கொள்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த 10 நாட்களில் 12 மசோதாக்களை நாடாளுமன்றம் படமாக்கியிருக்கிறது ஒவ்வொரு மசோதாவையும் பரிசீலிக்க 7 நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ளவில்லை நாடாளுமன்றத்தில் மசோதாக்களை பரிசீலனை செய்யாமல் நிறைவேற்றி வருகின்றன என்று குறை கூறுகிறார்கள் .

இவையெல்லாம் ஆணவத்தோடு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அவமதிக்கும் செயல்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவதூறு சுமத்தும் நடவடிக்கைகளாகும். அவர்கள் தங்கள் நடவடிக்கைகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இயங்கும் அவைகளை அவமதிக்கிறார்கள் அதன்மூலம் அரசியல் சட்டத்தையும் அவர்கள் அவமதிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ கல்வியில் 27 சதவீத இடங்களை ஒதிக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார்கள் அதே நேரத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியதற்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவ கல்லூரிகளுக்கும் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்று அவர்கள் தங்கள் பாராட்டு உரையின்போது தெரிவித்தார்கள்.

No comments

Thank you for your comments