Breaking News

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

 வேலூர், ஆக.26-

வேலூர், அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பயிற்சியில் சேர்ந்து பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கான தொழிற்பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

வேலூர், அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் கல்வி பெறுவதற்காக 12.08.2021 முதல் 23.08.2021 வரை கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற்று. தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு 24.08.2021 முதல் 15.09.2021 வரை மதிப்பெண் அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 

FITTER, ELECTRICIAN, TURNER, MACHINIST, MECHANIC MOTOR VEHICLE, DRAUGHTSMAN CIVIL. 

கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 

WIREMAN, WELDER, SHEET METAL WORKER, CARPENTER, LEATHER GOODS MAKER, FOOTWEAR MAKER

ஆண்/பெண் இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில்  சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.         

விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-மட்டும் Debit card/ Credit card/ Net Banking/G-PAY  மூலம் செலுத்த வேண்டும்.  

பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750/- விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை மற்றும் தையற்கூலி, காலணி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு, பயிற்சியாளர்களுக்கென அறிவிக்கும் சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

விரிவான விவரங்களுக்கு அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூர், (0416-2290848), அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகி பயிற்சியில் சேர மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments