Breaking News

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா.! - குவியும் பாராட்டுகளும்.. பரிசு மழையும்... வாழ்த்துக்கள்...

 

டோக்கியோ: 

இந்திய ஒலிம்பிக் தடகள வரலாற்றில் முதல் தங்கம் வென்று ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நூற்றாண்டு சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று தந்த அரியானா வீரருக்கு பாராட்டு மழை குவிகிறது. 


டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87 புள்ளி 58 மீட்டர் தூரம் எறிந்து முதல் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.

12 போட்டியாளர்களை எதிர்த்து களமிறங்கிய நீரஜ் சோப்ரா 6 முறைகளில் அதிகபட்சமாக 87 புள்ளி 58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். 

தங்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று இதற்கு முன் இல்லாத வெற்றியை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

 


டோக்கியோவில் வரலாறு எழுதப்பட்டுள்ளது என்றும், நீரஜ் சோப்ராவின் சாதனை எக்காலமும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து



 மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்


120 ஆண்டுக்காலமாக ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லாத குறை நீங்கியுள்ளதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரியானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள், உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அரியானா மாநில முதலமைச்சர் பரிசு அறிவிப்பு மனோகர் லால் கட்டார்

பதக்கம் வென்ற நீராஜ் சோப்ராவுக்கு, அரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் 6 கோடி ரூபாய் பணம், குரூப் 1 பிரிவில் அரசு வேலை, மானிய விலையில் வீட்டுமனை, பஞ்சகுலாவில் அமைய உள்ள தடகள வீரர், வீராங்கனைகளுக்கான மையத்தின் தலைவராக நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பரிசு அறிவிப்பு

பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர்சிங் விடுத்த அறிவிப்பில், “ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்தியாவுக்கான பெருமைக்கான தருணம். சோப்ராவின் குடும்பத்தினர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து அனைத்து பஞ்சாப் மக்களும் சோப்ராவால் பெருமை அடைகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 பிசிசிஐ பரிசு அறிவிப்பு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பி.சி.சி.ஐ. ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

 சிஎஸ்கே அணி

ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பரிசு அறிவித்துள்ளது.  சிஎஸ்கே அணி விடுத்த அறிவிப்பில் “ ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ. 1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். 

அத்துடன் அவரை கவுரவப்படுத்தும் விதமாக 8758 (ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த தூரம் 87.58 மீட்டர் ஆகும்) என்ற எண் கொண்ட சிறப்பு சீருடை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்டிகோ நிறுவனம்

இந்திய விமான நிறுவனமான இன்டிகோ நிறுவனம் விடுத்த அறிவிப்பில் “ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட்7ம் தேதிவரை இன்டிகோ நிறுவனத்தில் ஓர்ஆண்டுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம்” எனத் தெரிவி்த்துள்ளது.

மகிந்திரா அன்ட் மகிந்திரா

மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், “ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்கு புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும்” என அறிவி்த்துள்ளார்.

மும்முனை போட்டிகளில் தங்கம் வென்ற முதல் வீரர்  நீரஜ் சோப்ரா

இந்திய ராணுவத்தின் Rajputana Rifles 4-வது படைப் பிரிவில் சுபேதார் மேஜராக இருக்கும் நீரஜ் சோப்ரா, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் என மும்முனை போட்டிகளில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

நீரஜ் சோப்ராவின் வெற்றியை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அரியானா மாநிலம் பனிபட்டில் பெற்றோர், உறவினர்கள், பொது மக்கள், ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


No comments

Thank you for your comments