Breaking News

வேலூரில் வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை

வேலூர், ஆக.17-

வேலூரில் பால் கறக்கும் தொழிலாளி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் தொடர்பாக கொலை நடந்ததா? என்று போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் கஸ்பா எடத்தெருவைச் சேர்ந்தவர் விஜி என்கிற விக்னேஷ்(24) பால் கறக்கும் தொழிலை செய்து வந்தார். இவர் மீது பல்வேறு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை கஸ்பா சுடுகாடு பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த விக்னேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏதாவது முன் விரோதம் தொடர்பாக விக்னேஷ் கொலை செய்யப்பட்டரா? என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புக்களை வைத்தும் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கஸ்பா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் அடிப்படை காரணம் வேலூர் தெற்கு போலீஸார் இரவு ரோந்து பணிக்கு செல்வதே இல்லை. மாறாக திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகில் 4 பேரும், தெற்கு காவல் நிலையத்துக்கு எதிரிலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி கொண்டு வாகன தணிக்கை என்ற பெயரில் வசூல் வேட்டை செய்வதிலேயே குறியாக உள்ளனரே தவிர தெருத்தெருவாக ரோந்து பணியை ஒருநாளும் மேற்கொள்வதே இல்லை.

இதை இரவு நேரத்தில் பணிக்கு வரும் காவலர்கள் மேற்கொள்ளும் பணியை தணிக்கை செய்ய வருகை தரும் காவல் துறை உயரதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாலேயே இதுபோன்ற அலட்சியத்துடன் காவலர்கள் பணியாற்றிட தொடங்கி விட்டனர். இரவு நேரத்தில் இருவர் இருந்தால் தணிக்கை பணியை மேற்கொள்ள இயலாதா? என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இரவு ரோந்து என்றைக்கு பலப்படுத்தப்படுமோ அன்றைக்குதான் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். 

இல்லையெனில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான். இதுபோன்று இரவு ரோந்து செல்வதற்காக இதற்கு முன்பு பதவி வகித்த டிஜிபி போன்றோரோ போலீஸாருக்கு சைக்கிள்களை வழங்கினர். அதுவும் அதிகாரி மாறியதும் ஓரங்கட்டப்பட்டு விட்டது. நிலைமை இப்படியே மோசமாக போய்க்கொண்டிருந்தால் காவல் துறை யாருக்கு பாதுகாப்பு தரும் என்பதற்கு சந்தேகத்துக்கு உரியதாகவே மாறிவிடும்.

No comments

Thank you for your comments