கொரோனாவை முன்கூட்டியே தெரிவிக்காமல் மூடி மறைத்தது சீனா.... மீண்டும் வலுக்கும் குற்றச்சாட்டு
வாஷிங்டன்:
கொரோனா பற்றி சீனா உரிய காலத்தில் எச்சரிக்கை செய்திருந்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதைத் தவிர்த்திருக்க முடியும் என்று US Republicans வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசின் பொய்கள் மூடிமறைத்தல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவின் ஆரம்ப நிலையில் உலகிற்கு உண்மையைக் கூற முயன்றவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் சொந்த நாட்டு மக்களிடமும் உலகிடமிருந்தும் கொரோனா பற்றிய உண்மைகளை மூடி மறைத்ததாக சாடியுள்ள அந்த அறிக்கையில் இதற்கான பல்வேறு உதாரணங்கள் அடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்புகளை 86 சதவீதம் குறைத்திருக்கக் கூடிய அளவுக்கு முன்கூட்டியே சீனாவுக்கு தகவல்கள் கிடைத்திருந்த போதும் அவற்றை மூடி மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments