நிதியமைச்சர் பிடிஆர்க்கு சவால் விடுத்த பாஜக அண்ணாமலை!.... சவாலுக்கு சவால் விடுக்கும் நெட்டீசன்கள்...
சென்னை:
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார்; இதனை தமிழக நிதியமைச்சர் ஒப்புகொள்வாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நெட்டீசன்கள் வழக்கம் போல் பதில் அளித்து வருகின்றனர்...
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியும் கொண்டிருக்கிறது. எரிப்பொருட்களின் இந்த அபரிமிதமான விலையேற்றத்தால் காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எரிப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
அத்துடன் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளில் முக்கிய அம்சமாக, திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், அரசின் நிதி நிலையை காரணம்காட்டி, பெட்ரோல், டீசல் விலையை தற்போதைக்கு குறைக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கைவிரித்துவிட்டார்.
இந்நிலையில், இந்த விஷயத்தை வைத்து தமிழக நிதியமைச்சரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்
இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
மத்திய அரசு பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார் ;
தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொள்வாரா?
எதிர்கட்சியாக திமுக இருந்த போது சொன்னதை இப்போது செய்ய தயாரா?
என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர முடியாததற்கு மாநில அரசுகளே காரணம் என்று தொடர்ந்து மத்திய அரசு கூறிவரும் நிலையில், அண்ணாமலையின் கேள்விக்கு தக்க பதிலடி தரும் விதத்தில் தமிழக அரசு இந்த விஷயத்தில் அதிரடி முடிவெடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதிவுக்கு நெட்டீசன்கள் பதிலளித்து வருகின்றனர்... அதில் சில பதிவுகள் ...மத்திய அரசு பெட்ரோல்,டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரத் தயார் ; தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொள்வாரா?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 2, 2021
எதிர்கட்சியாக திமுக இருந்த போது சொன்னதை இப்போது செய்ய தயாரா?
- மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/J8ney0bQhE
மலை நீங்க வெறும் மாநில தலைவர் அவளவுதான் நீங்க பிரதமர் இல்லை நீங்க சொன்ன கர்நாடகா முதல்அமைச்சரோ கேட்கிறது கிடையாது உன் நிலமை இதுதான் pic.twitter.com/gsUc64bG97
— Hameed (@Hameed09899880) August 2, 2021
நீ வாயால் வடை சுடுவதை நிறுத்தி விட்டு மோடி அல்லது நிர்மலா சீதாராமனை சொல்ல சொல்லு...
— திருநாகை சா (@AjsBatcha) August 2, 2021
மற்ற மாநில நிதி அமைச்சர்களின் அறிவுரை கேட்டு தான் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதா 🗻மலை.
— மனிதம் (@sureshchella) August 2, 2021
பெட்ரோலை GST குள் கொண்டுவர தயார்னு அண்ணாமலை சொல்லி என்ன பயன்? PM அல்லது FM இதை பத்தி எதுவும் சொல்லவில்லையே. பிறக்காத பிள்ளைக்கு இப்போவே ஜாதகம் ஏன் பாக்கணும்? வெறும் வாயை மெல்ல முடியாம ஏதாவது இப்படி குதர்க்கமா கேக்குறது நல்லாவா இருக்கு?
— Sriram Sreekantan (@SriramSreekant1) August 2, 2021
யார்யா இந்தாளு.. நமக்கு நல்லா என்டர்டெயின்மென்ட் குடுக்குறாரே.
— Bharath Kumar (@Bharath64977639) August 2, 2021
மிஸ்டர் நீங்க சொன்னா நடந்துருமா? பால்ட்டிக்ஸ் தெரியாம பால்ட்டிக்ஸ் பண்றே மேன் நீ.. pic.twitter.com/iAZ8z3sJ6V

No comments
Thank you for your comments