தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல்
சென்னை:
தமிழ்நாடு அரசின் 2021 -2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக சட்டப் பேரவை செயலர் கி. சீனிவாசன் இன்று (4-8-2021) தெரிவித்துள்ளார். பொது பட்ஜெட்டிலும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் 2021- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 2021- 22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தது. தற்போது திமுக அரசு முழுமையான பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
அதுமட்டுமின்றி வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து. அதற்காக திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
பொது பட்ஜெட்டிலும், வேளாண்மைத்துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து அவர் தீவிர ஆய்வு செய்தார். அந்த ஆய்வுப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. அந்த திட்டங்களை பட்ஜெட்டில் இடம்பெறச் செய்வது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டம் நிறைவு பெற்றது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் அறிவிப்பு
இதையடுத்து சட்டசபையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கலைவாணர் அரங்கில், 3வது தளத்தில் நடைபெறும் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள இந்தத் தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் தாக்கல்
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.


No comments
Thank you for your comments