கோவில்களில் தமிழில் அர்ச்சனை - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, ஆக.2-
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஞாயிற்று கிழமை (1-8-2021) அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும். 47 கோவில்களை தேர்வு செய்து அன்னை தமிழில் அர்ச்சனை என அறிவிப்பு பலகை வைக்கப்படும்.
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், தொலைபேசி எண் ஆகியவை பலகையில் எழுதி வைக்கப்படும், முதலில் பெரிய கோவில்களில் தமிழ் அர்ச்சனை அறிமுகம் செய்யப்பட்டு பிறகு சிறிய கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என சென்னை & பிராட் வேயில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டியளித்தார்.
கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக எம்.பி. தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments
Thank you for your comments