Breaking News

இளம்பெண்ணின் கண்ணிலிருந்து மண் கொட்டும் அதிசயம்

திருப்பதி, ஆக.2-

திருப்பதி அருகே இளம்பெண்ணின் கண்ணில் இருந்து தினமும் 50 முதல் 100 கிராம் வரை மண் கொட்டுவதை அப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.



ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பட்டுமகாதேவி கோனேரி பகுதியை சேர்ந்தவர் முன்னி.இவரது மகள் ஜோதி (வயது 17). ஜோதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கண்ணில் இருந்து சிறிதளவு மண் வந்துள்ளது. இதையடுத்து அவரது தாயார் ஜோதியை கண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிவில் ஜோதிக்கு கண்ணில் எந்த குறைபாடும் இல்லை என டாக்டர்கள் கூறி அனுப்பியுள்ளனர். 

நாளுக்குநாள் ஜோதியின் கண்ணிலிருந்து மண் கொட்டுவது அதிகரித்து வருகிறது. ஜோதியின் கண்ணில் இருந்து தினமும் 50 முதல் 100 கிராம் வரை மண் கொட்டுகிறது. இந்த தகவல் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக பரவியது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஜோதியின் கண்ணில் மண் கொட்டுவதை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.  இதையும் படியுங்கள்...தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது & கனிமொழி

No comments

Thank you for your comments