Breaking News

இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மங்கா பிள்ளை தலைமையில் மீரா மிதுன் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், டெல்லியில் ஒன்பது வயது தலித் சிறுமியை மாயனத்தில் வைத்து கூட்டு பாலியல் பலத்காரம் செய்து கொலை செய்து எரித்த பூசாரி உள்ளிட்ட 4 நபர்களை தூக்கிலிடு,  டோக்கியா ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் போரடி தோல்வியுற்ற வீராங்கனை வந்தனா கட்டார்யா வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து சாதி சொல்லி இழிவுபடுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பல்கலைகழகத்தில் தலித் மாணவி சந்தேகமான முறையில் உயிர் இழப்பிற்கான காரணத்தை  கண்டுபிடிக்க நீதி விசாரணை நடத்து,  தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பாளிடமிருந்து மீட்டெடுக்க தமிழக முதல்வர் உடனடியாக பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைத்திடு,  தமிழகத்தில் பட்டியிலன மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டியிலன மக்களுக்கு தனிநிதிநிலை அறிக்கை சமர்த்திடுக என கண்டன முழக்கம் எழப்பி உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட வேண்டும் என கோஷம் எழுப்பினர். மேலும் சினிமாத் துறையில் இருக்கும் பட்டியல் இனத்தவரின் தரக்குறைவாக பேசிய நீராம் இதனை இந்திய குடியரசு கட்சி சார்பாக வன்மையாக கண்டனம் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments