Breaking News

திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த கலெக்டரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட பள்ளி மாணவிகள்....

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொண்டங்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பயணாளி முத்துலெட்சுமி க/பெ குழந்தைவேல் 7 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கிணறு கட்டிவிருக்கிறார்.

இப்பணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்  ஆய்வு செய்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த முத்துலெட்சுமி குழந்தைவேல் பிள்ளைகளிடம்  மாவட்ட ஆட்சியர் நன்றாக படிக்க வேண்டும் என கூறினார். பின்னர்  மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அரியநாச்சி-சிறுகரம்பலூர் செல்லும் காட்டுபாதையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மூலம் 6 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்தார்.


உடன் கூடுதல் ஆட்சியர் பவண்குமார் ஜி கிரியப்பவனர், விருத்தாசலம் ஏ டி பிரபாகரன், வட்டாட்சியர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசிகாமணி, தன்டபாணி, காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொண்டங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன், கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, செயலர் ரேகா, துணைத் தலைவர் ஆகாசதுரை மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

No comments

Thank you for your comments