பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் போலி சிமெண்ட் விற்பனை!
தருமபுரி, ஆக.5-
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் போலி சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சுபம் டிரேடர்ஸ் நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். இங்கு தற்போது வேகமாக தான் வளர்வதற்கு உண்டான வழிகளை சுபம் டிரேடர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக பெண் ஒருவர் இந்த சுபம் டிரேடர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து திறமையாக நடத்தி வருகிறார். இந்த கடையில் கட்டடப் பணிகளுக்கான இரும்பு, சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் வாங்கும் கட்டட பொருட்களான சிமெண்ட் மற்றும் இரும்பு பொருட்களுக்கு உரிய ரசீது வழங்குவது இல்லை.
அதாவது பில் இல்லாமலேயே விற்பனை செய்யப்படுகிறது. அப்படியும் ஒரு சில வாடிக்கையாளர்கள் பில் வேண்டும் என்று கேட்டால் கையில் எழுதிய ரசீது ஒன்றை கொடுத்து அனுப்புகின்றனர். கம்ப்யூட்டர் பில் வழங்குவது இல்லை. இது அரசை ஏமாற்றும் வேலை என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. ஜிஎஸ்டியும் செலுத்துவதும் இல்லை என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையா? புரளியா? என்பது தெரியவில்லை. ஆனால் சிமெண்ட் மூட்டைகளில் கலப்படம் செய்து விற்பனை செய்வது மட்டும் உறுதிபட கூறலாம்.
பல வீடு மற்றும் கட்டட வேலைக்கு இந்த சுபம் டிரேடர்ஸ் நிறுவனத்தில் வாங்கிச் செல்லும் சிமெண்ட் போலி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இந்த சுபம் டிரேடர்ஸ் நிறுவனத்தில் இரும்பு மற்றும் சிமெண்ட் வாங்கி ஏமாற்றப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனத்தை நாடுவது இல்லை. போலி சிமெண்ட்டை தைரியமாக விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது இந்த சுபம் டிரேடர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தை ஒரு பெண் நிர்வகித்து வருகிறார். இதனால் இவரால் ஏமாற்றம் அடைந்த பல வாடிக்கையாளர்கள் அந்த பெண்ணை எதிர்த்து கேட்க முடியாமல் விட்டு விடுகின்றனர். ஒரு சில வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து அந்த பெண்ணிடம் சென்று தட்டிக் கேட்டால் அவர் தன்னுடன் வைத்துள்ள 5க்கும் மேற்பட்ட அடியாட்களை ஏவி விட்டு மோதல் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறார் அந்த பலே பெண்மணி. நாங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க காவல் நிலையத்துக்கு கணிசமான தொகையை மாத மாமூலாக கொடுக்கிறோம் என்று தெனாவெட்டாக கூறி வருகிறார் அந்த பெண்மணி. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் இந்த போலி சிமெண்ட் உதவியுடன் கட்டப்படும் கட்டடங்கள் இடிந்த விழும் அபாயமும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆதலால் இதுபோன்ற போலி சிமெண்ட் விற்பனை செய்யும் சுபம் டிரேடர்ஸ் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டும் என்று பாப்பிரெட்டிப்பட்டி வாழ் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், இந்த நிறுவனத்தில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் வாங்கி ஏமாற்றம் அடைந்தவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பஜாரில் கடை வைத்துக் கொண்டு இப்படி தெனாவெட்டாக பொதுமக்களை முட்டாள்களாக்கி வரும் இந்த பலே பெண்மணி மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. இவர்களிடம் மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லப்படும் காவல் துறையில் பணியாற்றும் அந்த கடமை தவறாத காக்கிகள் மீது காவல் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளும் வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் வயிற்றை கட்டி, வாயை கட்டி வீடு கட்டும் பலரது கனவு தரைமட்டமாக போக காரணமாக இருக்கும் சுபம் டிரேடர்ஸ் நிறுவனம் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்போகிறதா? அல்லது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments
Thank you for your comments