பனை ஏறும் கருவிகள் தொழிலாளர்களுக்கு வழங்க திட்டம் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சென்னை, ஆக.20-
பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏற உதவும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
பனை தொழிலாளர் களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, போதையில்லா பதனீரை விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தென்னை மரத்தில் தொழில்நுட்பத்துடன் நீரா பானம் இறக்க வேண்டும் எனக்கூறிய அவர், நீரா பானத்தை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யலாம் என்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றும் ஜி.கே.மணி யோசனை தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
நீரா பானம் தயார் செய்ய முன்வருபவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments
Thank you for your comments