Breaking News

அனைத்து கட்சி சார்பில் சமாதான கூட்டம்...!



விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பரங்கிப்பேட்டை சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள வீடுகள், சிலைகள், கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் பரங்கிப்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலை, சாலைக்கு இடையூறாக இருக்கின்றன.

அதனால் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்காக விருத்தாசலம் சார் ஆட்சியர் முன்னிலையில்  அனைத்து கட்சி சார்பில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்த சமாதானக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் ஐய்யாயிரம், நகர செயலாளர் முருகன், நகர ஒருங்கிணைப்பாளர் வே.மா.அருள் மற்றும் திமுக, அதிமுக, கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும இக்கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலை அமைக்கும் இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தப் பிறகு, சிலை மாற்றி வைப்பதற்கான முடிவு செய்யலாம் என்று முடிவு எட்டப்பட்டது. 

இதனை தொடர்ந்து சிலை அமைக்கும் இடத்தை அனைத்துகட்சியினரும்  நேரில் சென்று ஆய்வு செய்தனர் 

அப்போது ஒருமனதாக ரோட்டின் ஓரமாக உள்ள இடத்தினை தேர்வு செய்து அதில் அண்ணல் அம்பேத்கரின் வெண்கல திருஉருவ சிலை அமைப்பதற்கு வருவாய்த்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து கட்சியினரும் அரசு விழாவாக நடத்த வேண்டும் என ஒப்புக்கொண்டனர்.

அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலை இடமாற்றம்  முடிவில், அனைத்து கட்சி  சமாதான கூட்டத்தில் சமாதானம் எட்டப்பட்டது. 

No comments

Thank you for your comments