Breaking News

பாலம் மற்றும் ஒழுங்கியம் அமைக்க வலுக்கும் கோரிக்கைகள்...


கடலூர்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தின் அருகில் சின்ன நரி ஓடையின் குறுக்கே பாலம் மற்றும் ஒழுங்கியம் கட்டும் பணிக்கு பொதுப்பணித் துறையின் மூலம் அளவு எடுத்து மண் பரிசோதனை செய்து பணி ஆரம்பிக்க அரசுக்கு கோப்புகள் அனுப்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், 2020-2021 நிதியாண்டிலேயே அரசாணை பெற்று பணிகள் துவங்கப்படும் என கடலூரைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூறினார்கள்.  ஆனால் இந்நாள் வரையில் பணிகள் தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், பாலம் மற்றும் ஒழுங்கியம் அமைத்துக் கொடுத்தால் சின்ன நரி ஓடையில் வெள்ள காலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்.

ஒழுங்கியத்தில்  தண்ணீர் தேங்கினால் எங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களான ஆலிச்சிக்குடி, ஆலந்துறை பட்டு, கருவேப்பிலங்குறிச்சி, பூந்தோட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டம் உயரும்... 

இதனால், சுமார் 875 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடை மற்றும் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். 

ஆகையால், எங்கள் கிராமத்தின் பொதுமக்கள் நலன் கருதி சிறுபாலம் மற்றும் ஒழுங்கியம் கட்ட நடப்பு நிதியாண்டில் நிதி அளித்து உடனடியாக பணி துவங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும், எங்கள் கிராமத்திற்கு 88, 89, 95 ஆகிய எண்களில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட மயானம் மற்றும் மயான பாதை உள்ளது.

ஆனால் தற்போது சில தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் பயணத்திற்கான இடம் மற்றும் பாதை குறைவாக உள்ளது. அதனால் பொது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவ்வப்போது சிறுசிறு சச்சரவுகள் ஏற்படுகிறது. 

இதனையும் கவனத்தில் கொண்டு உரிய தீர்வு அளிக்குமாறு... இளமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர்  இளவரசன் தலைமையில், அக்கிராம முக்கியஸ்தர்கள் தமிழர் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் பழனிவேல், பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் கோயில் தர்மகர்த்தா ராமசாமி கிராம முக்கியஸ்தர்கள் ராமலிங்கம் மற்றும் கிராம ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வட்டாச்சியர் சிவகுமாரிடம் மனு அளித்தனர்.

No comments

Thank you for your comments