Breaking News

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் கோலாகலம்...

காஞ்சிபுரம்: 

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் தாரகை மந்திரமான "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்பதின் அடிப்படையில்   விஜயகாந்த்  பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் நகரம் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி  சிறப்பு அழைப்பாளராக மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஏகாம்பரம்  கலந்து கொண்டு மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் பெரு நகர கழக செயலாளர் சந்திரமௌலி முன்னிலையில்  31வது வார்டு செயலாளர் பாலச்சந்தர் ஏற்பாட்டில்  தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்  பிறந்த நாளான இன்று தேமுதிக கழக தொண்டர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர் 

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு புடவை வேட்டி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்றவற்றை வழங்கியும் பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது

இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் மணிவண்ணன், நகர துணை செயலாளர் காஞ்சி குமார், துணை செயலாளர் கோதாவரி ராஜேந்திரன், மகளிரணி நிர்வாகிகள் வனஜா குமரேசன், பாக்கியலட்சுமி, இளைஞரணி பெருமாள், மாணவரணி செயலாளர் சுனில், நெசவாளர் அணி பூபதி மற்றும் நிர்வாகிகள் ஜெயக்குமார், அண்ணாதுரை, பஞ்சாட்சரம், பூபாலன், கமலநாதன் தேவேந்திரன், சுரேஷ், புருஷோத்தமன், சீனிவாசன், சுந்தர் மற்றும்  கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கேப்டன் விஜயகாந்த்  பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

No comments

Thank you for your comments