இரண்டரை அடி அகலம் கொண்ட ஆழத்தில் விழுந்த பசு கன்றினை தீயணைப்பு துறையினர் மீட்பு...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வரும் வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டிடம் பின்புறம் இரண்டரை அடி அகலம் கொண்ட ஏழு அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பசு கன்று விழுந்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வரும் பொதுப்பணித்துறை கட்டிடம் பின்புறம் இரண்டரை அடி அகலமும் ஏழு அடி ஆழமும் கொண்ட பள்ளத்தில் பசுவின் கன்று தவறி விழுந்தது.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தகவலின் பேரில் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பசுவின் கன்றை மீட்டு தாய் பசுவிடம் சேர்த்தனர்.
இந்நிகழ்வு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பணிபுரியும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் அனைவரும், பசுவின் கன்றை மீட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு தீயணைப்புத்துறை காவலர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments