Breaking News

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா?- இபிஎஸ் பதில்

சென்னை:

டெல்லி சென்றுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த நேரத்திலும் பாரதிய ஜனதாவில் இணையலாம் என்ற செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தனது பேச்சால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தியவர் அன்றைய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக எந்தவித கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்த இவர் திடீரென டெல்லி சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த  ராஜேந்திரபாலாஜி, பா.ஜனதாவில் இணைவார் என்றும், அதற்காகத்தான் டெல்லி சென்றுள்ளார் என்றும் அரசியல் களத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு காரணம் கடந்த கால அரசியலில் அவரது பா.ஜனதா ஆதரவு பேச்சுதான்.

இந்நிலையில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதாவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,

ராஜேந்திரபாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அ.தி.மு.க.வில்தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments