Breaking News

சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்..!... விடாது விரட்டும் நெட்டீசன்கள்...!!

விசிக தலைவர்-அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

அடங்காத நெட்டீசன்கள்.. தொடரும் வைரல் போட்டோ..

 சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன், அமைச்சர் ராஜ கண்ணப்பனை சந்தித்த நிகழ்வு  பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கு வைரலாகியுள்ளது. இது குறித்து திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், விசக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தும் அடங்காத நெட்டீசன்கள் மீண்டும் சர்ச்சை பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.


போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் ராஜக்கண்ணப்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க(31.07.2021) விசிக தலைவர் திருமாவளவன் சென்றதாக சொல்லப்படுகிறது

அது சம்மந்தமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. 

அமைச்சர் சொகுசான சோஃபாவில் அமர்ந்தபடியும், விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அமைச்சரிடம் பேசுகிறார். அதுவும் அந்த பழைய உடைந்த நாற்காலி அந்த நேரத்திற்கு மட்டுமே எடுத்து வந்து போட்டதாக தெரிகிறது.

இந்த புகைப்படங்கள் போலியானவை என்று சில தரப்புகள் கூறுகின்றன. ஆனால், சமூகத்தில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் அந்த புகை படத்தை பகிர்ந்திருப்பதும், குறிப்பிட்ட இந்த நிகழ்வினை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிராமல் இருப்பதும் பல்வேறு குழப்பங்களை சர்ச்சைகளையும் ஏற்படுத்துகிறது.

இந்த புகைப்படத்தை பகிருபவர்கள், ''பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான திருமாவளவனுக்கு பழைய பிளாஸ்டிக் நாற்காலியை தேடிப்பிடித்து எடுத்து வந்து அதில் அமர வைத்தது ஏன்??

அருகில் அவ்வளவு பெரிய சோபா இருந்தாலும், பழைய பிளாஸ்டிக் நாற்காலியில் இவரை அமர வைத்திருப்பது ஏன்? சமூக நீதியை முன்வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சியிலேயே சாதி பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அதுவும் கூட்டணி கட்சியின் தலைவருக்கு இந்த நிலைமையா?'' என நெட்டீசன்கள் கமெண்டிட்டு வருகின்றனர்.

ராஜ கண்ணப்பன் மீது மரியாதை கூடுகிறது! யது குல ஸ்ரீ கிருஷ்ணன் முன்னாடி அனைத்து குருமா கும்பலை மண்டி போட வைத்துள்ளார்.

ஒரு நெட்டீசன், புகைபடத்தை பதிவேற்றி, கை ரெண்டையும் கட்டிக்கிட்டு பவ்யமா இருக்குற திருமா முன்னாடி இருக்குற ஆளு யாருங்க ? என்று கேள்ளி எழுப்பி quiz program நடத்தி உள்ளார். அதற்கும் நம் நெட்டீசன்கள் பல்வேறு விதமாக பதில் அளித்துள்ளனர்...

இன்னொரு நெட்டீசன், வித்தியாசம் யார் பார்க்கிறார்கள்.... ?

ஜாதியை பார்த்து அமர வைப்பது யார் ..?

இப்போவாது  திருந்துங்க திருமா பாய்ஸ் ... என்று விசிகவினருக்கு அட்வைஸ் கூறி உள்ளார். அதற்கும் விசிகவினர் தக்க பதிலளித்தும் வருகின்றனர்.

இன்னொரு நெட்டீசன், பாவம், இந்துக் கடவுளை மட்டும் இழிவுபடுத்திப் பேசும் திருமா கும்பல் கிருஷ்ண பகவான் முன்பு மண்டியிட்டு...

இதுதான் சமூக நீதி -  திருமா அண்ணன். என்று பல்வேறு விதமாக விமர்ச்சித்து வருகின்றனர் நெட்டீசன்கள்... 

இதுகுறித்து, விசக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, 

சோஃபாவில்  மூணுதரவை வந்து  பக்கத்தில் உட்காருங்கள் உட்காருங்கள் என்று சொன்னார்,  அந்த நாற்காலியில் உட்காருங்கள் என்றார் அந்த நாற்காலி தள்ளி இருக்கின்றது இடையில ஒரு சிலை வைத்திருக்கிறது.

பக்கத்துல முகம் பார்த்து பேச வேண்டும் என்று நானா எடுத்து போட்டு உட்கார்ந்தேன். எனக்கு என்ன தேவை இருக்கு நான் எதற்கு பணிந்து இருக்க வேண்டும், அப்படி ஒரு அவசியமே எனக்கு கிடையாது... எனக்குன்னு எந்த தேவையும் இல்லையே... 

அது குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சிவாதிகள், விடுதலை சிறுத்தை கட்சியில் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஏதாவது ஒரு சேறு பூச வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை நான் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டேன். என் நலனில் அக்கறை உள்ளவர்கள்  விமர்சித்தால் அதற்கு பதில் சொல்வேன் என்னை காழ்ப்புணர்ச்சியுடன் அனுகுகின்றவர்களை ஒரு போதும் பொருட்படுத்த மாட்டேன்.

என் அம்மா முன்னாடி கைகட்டி நிற்பேன், என் தோழர்கள் முன்னாடி கைகட்டி நிற்பேன் அது என்னுடைய மேனரிஸம் (mannerism) . மேனரிஸம் என்கிறது கூட தெரியாது. இதையெல்லாம் அரசியலாக்குவதுகூட அவர்களது இயலாமை.. இவ்வாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

இதற்கும், நெட்டீசன்கள் விமர்ச்சித்து வருகின்றனர்... 

அந்த சேர நானே தான் எடுத்து வந்து போட்டு உக்காந்துகிட்டேன்...தொல் திருமா. நம்பிட்டோம் நம்பிட்டோம்....

உண்மையில் இந்த பொய் போராளிகளிடம் சிக்கிக் கொண்டு திருமா சித்திரவதைப்படுகிறார். ஒரு மனுசன் தினம் தினமாய்யா விளக்கம் சொல்லிட்டு இருக்கமுடியும்? பாவம்ய்யா அவர விட்ருங்க .. ஓவர் அழுத்தம் கொடுக்காதீர் என்று ஒரு நெட்டீசன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். 

அதாவது, நண்பரான திருமாவளவன் அவராகவே பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தார். இதை பெரிதுபடுத்த அவசியமில்லை. என்று கூறியுள்ளார். 

இப்போதாவது நெட்டீசன்கள் விடுவார்களா...?

உங்கள் பார்வைக்கு சில வைரல் பதிவுகள்


No comments

Thank you for your comments