அதிரடி ஆக்ஷனில் இறங்கி வேலூர் மாநகராட்சி... கொரோனா விதிகளை மீறிய விடுதிக்கு அபராதம் - சீல்...
வேலூர்:
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் உத்தரவின் அடிப்படையில், வேலூர் மாநகராட்சி சங்கரன் அறிவுறுத்தல் பேரிலும் இரண்டாம் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் வார்டு- 28, சிஎம்சி ஹாஸ்பிடல் எதிரில் உள்ள காந்தி ரோடு பாபுராவ் தெருவில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுக்க தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது உட்பட வலியுறுத்தப்பட்டது.
அப்போது, தங்கும் விடுதியில் பணிபுரிபவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அப்போது, தடுப்பூசி போடாத மூன்று விடுதிகளுக்கு ரூ.5,000 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.15,000 வசூலிக்கப்பட்டது. மேலும் ஒரு தங்கும் விடுதியை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தங்கும் விடுதிகளில் தடுப்பூசி போட்டு இருக்கிறார்களா என கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என உதவி ஆணையர் தெரிவித்தார். இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார மேற்பார்வையாளர் அசோக் குமார், சசி குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



No comments
Thank you for your comments