Breaking News

கொரோனா எதிரொலி :ஆடிகிருத்திகை, ஆடிப்பெருக்கு பக்தர்கள் கூட்டம் தவிர்க்க கோயில்களில் தரிசனம் ரத்து

வேலூர், ஆக.2-

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கு 31.07.2021 முதல் 09.08.2021 காலை 6.00 மணிவரை நீட்டிப்பு என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு வெளியிடபட்டதனை தொடர்ந்து விதிமுறைகளை கண்டிப்புடன் நடை முறைப்படுத்த மாவட்டஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.  



அதன்படி வேலூர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த் தொற்று பரவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையிலும் இந்து அறநிலையத்துறை செய்தி வெளியீட்டின் அழப்படையிலும் 02.08.2021 அன்றுவரும் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயில்களில் 01.08.2021 முதல் 04.08.2021 ஆகிய நான்கு தினங்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், எதிர்வரும் 03.08.2021 அன்றுநடைபெறவுள்ள ஆடிப் பெருக்கு திருவிழாவிற்கும் திருக்கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.   தினமும் கோயில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜைகள் அந்தந்த கோயில் பணியாளர்களை வைத்து தொடர்ந்து பூஜை நடத்திக் கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். 


No comments

Thank you for your comments