Breaking News

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவிற்கு பாராட்டு விழா

 புதுடெல்லி, ஆக.3-

ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவிற்கு தில்லியில் பாராட்டு விழா இன்று (03.08.2021)  நடைபெற்றது. மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.

Foot Note: The Union Minister for Information & Broadcasting, Youth Affairs and Sports, Shri Anurag Singh Thakur along with the Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman felicitates the Tokyo Olympics Bronze medalist P.V. Sindhu at a function, in New Delhi on August 03, 2021.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2வது பதக்கத்தைப் பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்

Footnote : The Union Minister for Information & Broadcasting, Youth Affairs and Sports, Shri Anurag Singh Thakur, the Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman, the Union Minister for Culture, Tourism and Development of North Eastern Region (DoNER), Shri G. Kishan Reddy and the Minister of State for Home Affairs, Youth Affairs and Sports, Shri Nisith Pramanik felicitates the Tokyo Olympics Bronze medalist P.V. Sindhu at a function, in New Delhi on August 03, 2021. The Secretary (Youth Affairs), Smt. Usha Sharma and the Secretary (Sports), Shri Ravi Mittal are also seen.

பயிற்சியாளர் பார்க் டே-சாங்- உடன் வந்திருந்த சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் பயிற்சியாளர் பார்க் டே-சாங் ஆகியோருக்கு மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பயிற்சியாளர் பார்க் டே-சாங்-க்கு பொன்னாடையை அணிவித்தார் அமைச்சர் அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் டாக்கூர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.



No comments

Thank you for your comments