தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள் - தமிழரசு இதழின் சிறப்பு வெளியீடு
சென்னை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளின் தொகுப்பான, “தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்” தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசுப் பொறுப்பேற்று 100 நாட்களில் ஆற்றிய மக்கள் நலப் பணிகளைத் தொகுத்து, செய்தித்துறையின் சார்பில் “தலைநிமிரும் தமிழகம் - நூற்றாண்டின் திசையில் நூறு நாட்கள்”தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.8.2021) தலைமைச் செயலகத்தில் வெளியிட, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பெற்றுக் கொண்டார்.
இச்சிறப்பு மலரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மேற்கொண்ட களப் பணிகள், ஆய்வுப் பணிகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மேற்கொண்ட துறை வாரியான ஆய்வுகள், முக்கிய நிகழ்வுகளின் உரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை தொடர்பான செய்திகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் செய்தித்துறையின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


No comments
Thank you for your comments