Breaking News

வீடுகளில் ஆடு, மாடு, நாய் வளர்த்தால் வரி செலுத்த வேண்டும் - மாநகராட்சியின் தீர்மானம் அறிவிப்பு

மதுரை

மதுரை மாநகரில் இனிமேல் வீடுகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்தால் ஆண்டுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


இதுகுறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

கோழி, மீன் இறைச்சி கடைகள், விற்பனை கூடங்கள், சதுர அடிக்கு 10 ரூபாய் வீதம் ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்

உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடுகளில் வளர்க்கும் மாடு, ஆடு, நாய், குதிரை, எருமை போன்ற கால்நடைகளுக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் செலுத்தி மாநகராட்சியில் உரிமம் பெற வேண்டும் எனவும், அவை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்டால் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும், அதற்கு தினசரி பராமரிப்பு கட்டணமாக 200 ரூபாயும் விதிக்கப்படும்

சாலைகளில் வீட்டு நாய்கள்  பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், உரிமையாளருக்கு  ரூ.500 அபராதம் விதிக்கப்படும். என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments