Breaking News

லட்சியத்தோடு வாரி குவிக்கும் கே.வி.குப்பம் சார் பதிவாளர்

வேலூர், ஆக.10-

கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றுவதன் வாயிலாக பல லட்சங்களை வாரி குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கே.வி.குப்பம் சார் பதிவாளர் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


காட்பாடி தாலுகாவில் இருந்து கே.வி.குப்பம் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டது. கே.வி.குப்பம் தனி சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. இங்கு ரியல் எஸ்டேட் அதிகளவில் நடக்கிறது. இதனால் தினந்தோறும் கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளி போன்று கொண்டாட்டங்கள் நடக்கின்றன. 

கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித இடையூறும் இன்றி சார் பதிவாளர் பணியாற்றுகிறார். இவர் லட்சியத்தோடு பல லட்சங்களை வாரி குவித்துள்ளார் என்று அப்பகுதி மக்களும், ரியல் எஸ்டேட்டினரும் குற்றம் சாட்டியுள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு அவர்கள் சொல்வதுதான் வேத வாக்கு என்ற ரீதியில் பணியாற்றி அவர்கள் சொல்லும்படி பணியை செய்து முடித்து தருவதில் அவருக்கு நிகர் அவரேதான் என்று கூறலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பல முறைகேடான பணிகளையும் சத்தமின்றி சில லட்சங்களுக்காக இவர் முடித்து தந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்கின்றனர் இப்பகுதி வாழ் ரியல் எஸ்டேட் அதிபர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

அப்படியே இவர் தொடர்ந்து பணியாற்றினாலும் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் இவர் அனைவரையும் அனுசரித்து செல்வதால் இவரை யாரும் கண்டுகொள்வது இல்லையாம்....  மேலதிகாரிகள்.... 

வேலூரில் இருந்து கே.வி.குப்பத்துக்கு தினமும் வந்து செல்கிறார். இவர் தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். மெல்ல பதவி உயர்வு கிடைத்து கே.வி.குப்பம் வந்தார். கே.வி.குப்பம் சார் பதிவாளராக பணி நியமனம் ஆனதில் இருந்து எவ்வித சலனமும் இல்லாமல் பணியாற்றி கொண்டுள்ளார். அலட்டிக் கொள்ளாமல் கல்லா கட்டி வருகிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

ஆனால் வெளி நபர்கள் கேட்டால் இது கிராமப் பகுதி. இங்கு ஒன்றும் பெரிய அளவில் எதுவும் கிடைக்காது என்று ஏதோ உத்தமபுத்திரன் போன்று பேசி வருகிறார். ஆனால் இவர் சுருட்டுவதை பார்த்தவர்கள் கதை கதையாகச் சொல்கின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்களை குறி வைத்துதான் இவரது வசூல் வேட்டை கொடி கட்டி பறக்கிறது. சார் பதிவாளர் அலுவலகத்திலேயே கேக் வெட்டி கைகளை தட்டி ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கொண்டாடி கூத்தடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார் கே.வி.குப்பம் சார் பதிவாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. 

லட்சியத்தோடு வாரி சுருட்டுவதில் கே.வி.குப்பம் சார் பதிவாளருக்கு ஈடு இணையாக யாரும் வர முடியாது என்று அடித்து கூறலாம். இவரைப் பார்த்து இவருடன் பணியாற்றும் சக அலுவலர்களும் மிரண்டு போயுள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

பூனை போல் இருப்பார், பணம் என்றால் சுறுசுறுப்பாக செயல்படுவார். அந்தவேலை முடியும் வரை காத்திருந்து அவர்கள் தரும் அன்பளிப்பு (லஞ்சம்) கிடைத்ததும் அந்த இடத்தை விட்டு அகல்கிறார். பொதுமக்கள் புரோக்கர்கள் இல்லாமல் வந்தால் அவர்களை அலைகழிக்கச் செய்கிறாராம்.... இது சரியில்லை, அது சரியல்லை என்று திருப்பி அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

புரோக்கர்கள் கொண்டு வந்தால் எவ்வித தடையும் இல்லை. அவை உடனடியாக கையொப்பமிடப்பட்டு பதிவு செய்து தரப்படுகிறது. புரோக்கர்கள் நிறைந்த அலுவலகமாக கே.வி.குப்பம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. 

பட்டப்பகலில் லஞ்சம் கை மாறுவதை யார் சென்றாலும் கண்களால் பார்க்க முடிகிறது. எந்தெந்த பணிக்கு எவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து வைத்துள்ளார் கே.வி.குப்பம் சார் பதிவாளர். 

கே.வி.குப்பம் சார் பதிவாளர் காட்டில் கனமழை பொழிகிறது. இதனால் சத்தம் காட்டாமல் பணியாற்றி வருகிறார். வேலூரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளதால் வந்து செல்ல வசதியாக உள்ளதாகவும் அவரே பல முறை சக ஊழியர்களிடம் தெரிவித்து வருகிறார். இங்கு நன்கு அனைவரிடமும் பரிட்சயம் ஆனதால் கே.வி.குப்பம் சார் பதிவாளர் என்ன சொல்கிறாரோ அந்த தொகை அவரது மேஜைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 

இவரைப் பற்றி எவ்வித செய்தியும் வெளிவராமல் இருக்க செய்தியாளர்கள் போர்வையில் வரும் போலி செய்தியாளர்களுக்கு தலா ரூ.300ஐ நாய்க்கு எலும்பு துண்டு கொடுத்து அனுப்புவது போன்று தூக்கி வீசுகிறார். அதையும் பல செய்தியாளர்கள் வாங்கிக் கொண்டு சத்தமின்றி செல்வதும் அன்றாட நிகழ்வாக ஒருபுறம் நடந்து கொண்டு உள்ளது. சில செய்தியாளர்கள் மிரட்டியே தலா ரூ.ஆயிரம் வரையிலும் வாங்கிச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இவர் அரசியல்வாதிகளிடம் ஒன்றுமே தெரியாதவர் போன்று நடிக்கிறார். இவருக்கு நடிகையர் திலகம் என்று பட்டம் கூட தரலாம் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

அப்படி ஒரு நளினம், எளிமை, பழகுவதில் இனிமை என்று அரசியல்வாதிகளை தனது கைப்பிடியில் வைத்துள்ளார் கே.வி.குப்பம் சார் பதிவாளர். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், இவர் அதையும் தாண்டி சென்று விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். 

இங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் வர மாட்டார்கள் என்று சவால் விடுகிறார் என்றால் அது எப்படி என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இது சார் பதிவாளர் அலுவலகமா? அல்லது புரோக்கர்கள் புகலிடமா? என்பது இன்றளவும் தெளிவுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வசூலாகும் பணத்தில் மூன்றில் 2 பங்கு கே.வி.குப்பம் சார் பதிவாளர் சுருட்டிக் கொள்கிறார். ஒரு பங்கை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு மனமார வாரி வழங்கி விடுகிறாராம்.... எவ்வளவு நல்ல மனம் படைத்தவர் கே.வி.குப்பம் சார் பதிவாளர் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

பொய்யாக உறவினர்களை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்வதை அறிந்தும் தைரியமாக பதிவு செய்த கொடுத்து விட்டு கல்லா கட்டி வருகிறார் கே.வி.குப்பம் சார் பதிவாளர். யாருக்கும் பயப்பட மாட்டார். அவர் முடிவு செய்து விட்டால் அதை முடித்து விடுவார். தனக்கு தன் பங்கு வந்து விட வேண்டும் என்பதில் மட்டும் கண்கொத்தி பாம்பாக இருக்கிறார். 

இவர் விரைவில் வலையில் அகப்படுவார் என்று பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கே.வி.குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது தந்தையின் சொத்துக்களை வெங்கடேசனின் சகோதரி கணவர் பெயருக்கு பதிவு செய்து கொடுத்து விட்டு பல லகரங்களை கறந்து விட்டார் இந்த புண்ணியவதி கே.வி.குப்பம் சார் பதிவாளர். 

பத்திரப்பதிவுத் துறையில் இப்படி தில்லாலங்கடி பேர்வழிகள் உள்ளே புகுந்ததால்தான் அந்த துறை இன்றைக்கு சீரழிந்து வருகிறது. 

4 ஆண்டுகளாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் கே.வி.குப்பம் சார் பதிவாளர் போன்றவர்களை களையெடுத்து விட்டு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி வாழ் பொதுமக்களிடம் வலுத்துள்ளது.... 

 கே.வி.குப்பம் அருகே குடியாத்தம் செல்லும் மெயின் ரோட்டில் சேலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் ரியல் எஸ்டேட் வாயிலாக வீட்டு மனைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்காக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கும் அந்த ரியல் எஸ்டேட் அதிபர் கே.வி.குப்பம் சார் பதிவாளருக்கு தனது பங்குக்கு ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக வாரி வழங்கியுள்ளார் என்றும், அதை அப்படியே வாங்கிக் கொண்டு காரில் பறந்து விட்டார் என்றும் சார் பதிவாளர் அலுவலக வட்டாரம் சொல்லி சொல்லி அங்கலாய்க்கின்றது. பணம் எனக்கு, வேடிக்கை உனக்கு என்ற ரீதியில் கல்லா கட்டி வருகிறார் சார் பதிவாளர்....

சார்பதிவாளர்கள் மீது எவ்வித புகார் அளித்தாலும் மாவட்ட பதிவாளர் லோகநாதன் கண்டுகொள்வதில்லையாம்... எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்¬லையாம்...   இதன் சிதம்பர ரகசியம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது... 

இதற்கு முன் இருந்த பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ஜனார்த்தனன் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லையாம்... தற்போது உள்ள டிஐஜியாவது நடவடிக்கை மேற்கொள்வாரா என்பது அப்பாவி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 சார் பதிவாளர்கள் சொல்வதுபோல்   தமிழக அரசின் நடவடிக்கையையும், பத்திரப்பதிவுத் துறையின் நடவடிக்கைகளையும் பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலி கே.வி.குப்பம் சார் பதிவாளர். இவர் கே.வி.குப்பத்தில் பணியை தொடர்வாரா? அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

No comments

Thank you for your comments