காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் பவித்ரோற்சம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் பவித்ரோற்சவத்தின் 6ம் நாள் பவித்திர நூல் மாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உலக மக்களின் பாவ புண்ணியங்களுக்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் முதல் ஏழு நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தொடங்கி 7நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவத்தின் 6-வது நாளாக இன்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பவித்ர நூல் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதிஉலா நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி செய்யப்பட்டு பிரபந்த கோஷ்டியினர் வேத பாராயணம் செய்ய யாகசாலையில் பூ,பழம்,பட்டு, பீதாம்பரம், நவதானியங்கள், உள்ளிட்டவை யாகதீயில் இட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று காரணமாக இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் இன்று வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற பவித்ரோற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சியளித்த வரதராஜப்பெருமாள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
No comments
Thank you for your comments