முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கிய 9-வயது மாணவி - அசத்தல்
கடலூர்:
இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவுநாள்... அவரது சாதைனை போற்றும் வகையில் யோகா செய்து கொண்டு முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனைகளை 9-வயது மாணவி சஞ்சனா விளக்கி உள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் பிரபு. இவரது மனைவி லட்சுமி, இவர்களுக்கு இரு மகள்கள். முதல் குழந்தையாக சஞ்சனா வயது 9, 2வது குழந்தை சுமேஷ்கா.
ஒன்பது வயது சஞ்சனா என்பவர் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யோகா செய்து கொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை விளக்கியிருக்கிறார்.
சிறுவயதில் அழகாக யோகா செய்துகொண்டு முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் சாதனைகளை 9-வயது மாணவி அசத்தலாக விளக்கி உள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ...... உங்கள் பார்வைக்கு....


No comments
Thank you for your comments