Breaking News

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம், ஆக.13-

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள்  மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.


இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 

1) பாபா (27) த/பெ.காதர் பாஷா, நியமதுல்லா தெரு, காஞ்சிபுரம்,

2) விஷ்வா (21) த/பெ.ரமேஷ் எண்.1363, நேதாஜி நகர், பொய்யாகுளம், காஞ்சிபுரம், 

3) தமிழரசன் (எ) வெள்ளை (24) த/பெ.கருணாநிதி, எண்.6903, கோபுரம் தெரு, தாமல் கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும் 

4) யுவராஜ் (எ) ஊசலான் (25) த/பெ.கருணாகரன், எண்.103/03, கம்மாளம் தெரு, தாமல் கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா 

ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விஷ்ணுகாஞ்சி மற்றும் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழு மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் குற்ற செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments