தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை, ஆக.23-
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூ
ர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடற்கரை - இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 24ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அரபிக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் 26ம் தேதி வரை 5 நாட்களுக்கு மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அதிகபட்சமாக திருவள்ளூர் செங்குன்றம், கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியில் தலா செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னை, பேராவூரணி, பல்லடத்தில் தலா 7, வேப்பூர், திண்டிவனம், ராதாபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

No comments
Thank you for your comments