Breaking News

சட்டக் கல்லூரிகள் அனைத்தும் செப்.,1 முதல் திறப்பு

சென்னை, ஆக.23-

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளது என்றும், திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம்களில் தங்களை விடுதலை செய்யக்கோரி போராடி வரும் இலங்கை தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது அவர்களை மத்திய அரசுதான் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், 

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட உள்ளது. வரும் 26 ஆம் தேதி வரை சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு  கவுன்சிலிங் தொடங்கப்படும் அதன்பிறகு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு கல்லூரி திறக்கும் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம்களில் தங்களை விடுதலை செய்யக்கோரி போராடி வரும் இலங்கை தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது அவர்களை மத்திய அரசுதான் விடுதலை செய்ய வேண்டும். மத்திய சிறையில் சிறப்பு முகாம்களில் உள்ள அகதிகள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உரிய பாஸ்போர்ட் விசா ஆகியவை இல்லாமல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழக அரசைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணவு மற்றும் வழங்கப்பட்டு வருகிறது அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் தமிழக அரசின் கையில் இல்லை.

மதுரை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் சூதாட்டதிற்கு  தடை விதிப்பது குறித்து அரசிற்கு ஒரு வழிகாட்டுதலை அறிவித்துள்ளது அதன்படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு  தடைவிதிக்கும் சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்.

கொடநாடு விவகாரத்தில் உண்மை நிலை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் சாட்சியை விசாரணை செய்வதோ அல்லது மறுவிசாரணை செய்வதோ தமிழக அரசுக்கு உரிமை உண்டு. 

சாட்சியை மறுவிசாரணை செய்வதால் பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு தவறானது. பழிவாங்கும் எண்ணம் திமுகவிற்கு கிடையாது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கு தான் தேர்தல் அறிக்கையிலேயே திமுக கொடநாடு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி தான் நாங்கள் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments