குமரி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம்.... குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை... உறவினர்கள் குற்றஞ்சாட்டு
கன்னியாகுமரி:
குமரி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தை நாட முடிவு.
பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த காவல் அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க கோர திட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நான்கு மாதத்துக்கு பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு சில காவல் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு வெளியாகின.
இந்நிலையில், அதற்காக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து முக்கிய அரசியல் பிரமுகர்களை விடுவிக்க முயற்சித்து வருவதாக வெளியான தகவலை அடுத்து, மேற்படி வழக்கில் அரசியல் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டை தவிர்த்து நேர்மையான நீதி விசாரணை நடத்த சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முடிவு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேற்படி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் தக்கலை காவல் நிலையத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த உடன் அந்த புகாரில் புரோக்கராக செயல்பட்டதாக கூறப்பட்ட முக்கிய குற்றவாளியான ஜெபர்சன் வினிஷ் லால் தற்கொலை செய்துகொண்டதாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அந்த நபரின் தற்கொலைக்கு இளம்பெண் காரணம் என அவரது மனைவியிடம் புகார் மனு வாங்கி இளம்பெண் மிரட்டப்பட்டதாகவும் பின்னர் அந்த வழக்கு தற்கொலை என முடிக்கப்பட்டது.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரை தக்கலை போலீசார் மனு ரசீது போட்டு கைவிட்டனர். அதன் பின்னர் தனது ஆபாச வீடியோவையாவது கைப்பற்ற வேண்டும் என்று மீண்டும் இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
மேலும் தக்கலை காவல் நிலையத்துக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆன்லைனில் புகார் அனுப்பியும் ஆன்லைனில் அனுப்பப்பட்ட புகாரையும் தக்கலை போலீசார் முடித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
மேல்நடவடிக்கை எடுக்கப்படாமல் கைவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தமிழக முதல்வர் மற்றும் உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பிய பின்னரும் அந்தப் புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றும் மௌனம் காத்து வந்த நிலையில், இளம்பெண்ணின் பாலியல் புகார் குறித்த சம்பவங்கள் வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்களில் வெளியான பின்னர் தூக்கம் கலைந்த போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதில் பல முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் அந்த வழக்கின் குற்றவாளியாக உள்ளதாக உள்ள தகவல் இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்கள் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற கைது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் புகார் அளித்த இளம்பெண்ணை மிரட்டி முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற போலீசார் முயற்சித்து வருவதாகவும், பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மிரட்டி வருவதாகவும், அதனால் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நிலையை போலீசார் கையாண்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது மேற்படி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட புரோக்கராக செயல்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மரணத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், அவரை கொலை செய்துவிட்டு அந்தப் பழியை பாலியல் புகார் கொடுத்த இளம்பெண்ணின் மீது சுமத்த திட்டமிட்டு பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும் அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அதற்காக சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும் என்றும் இளம் பெண்ணின் உறவினர்கள் மத்தியில் தற்போது குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சிபிஐ விசாரித்தால் மட்டுமே இளம்பெண் நான்கு மாதங்களுக்கு முன் போலீசாரிடம் கொடுத்த பாலியல் புகார் வெளியான நிலையில் புரோக்கராக செயல்பட்ட முக்கிய குற்றவாளி தற்கொலை செய்துகொண்டதான வழக்கிலும் உண்மை நிலை வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதனால் வேறு வழியின்றி பாலியல் பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் யார் யார் என்பதும் முழுமையான விசாரணை நடத்தி அவர்களை கைது செய்ய சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முடிவு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தப்ப வைக்கப்பட உள்ள முக்கிய குற்றவாளிகளுக்கும் அவர்களுடன் தொடர்பில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் என்ன உறவு என்பதையும் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல்வாதிகள் யார் யார் உயர் அதிகாரிகள் யார் யார் என்பதையும் சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் பாலியல் பலாத்காரம் செய்து பதிவு செய்த ஆபாச வீடியோக்கள் இணையதள குற்றவாளிகளுக்கு விற்கப்பட்டு இருக்கலாமா என்றும் முழுமையான விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணை தேவையாக உள்ளது என்று கூறினர்.
மேலும் தற்போது அரசியல் தலையீடு காரணமாகவோ அல்லது காவல்துறை உயர் அதிகாரிகளின் தலையீடு காரணமாகவோ பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில் அதற்கு உதவும் போலீசாரையும் வழக்கில் சேர்த்து சிபிஐ விசாரணை நடத்த கோர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments
Thank you for your comments