Breaking News

ஹைதி நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 1,297 -ஆக உயர்வு

ஹைதி :

கரீபியன் கடலில் உள்ள தீவாகிய ஹைதியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1297 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் பிரதமர் ஏரியல் ஹென்றி கூறியுள்ளார்.


வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  வட அமெரிக்க கண்டம் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடு ஹைதி. இதன் தெற்மேற்கு பகுதியில், சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயஸ் குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். நகரம் முழுதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. நில நடுக்கத்தால் நொறுங்கிய வீடுகளுக்குள்ளிருந்தவர்கள் மீட்கப்படுகிறார்கள்.


ஹைதியில் மீட்பு நிவாரணப்பணிகளுக்கென தனி அமைப்பு கிடையாது. அதனால் சேவை அமைப்புகளும் பொதுமக்களும் மீட்புப் ப்ணியில் அரசுக்கு உதவி வருகிறார்கள். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1,297ஆக அதிகரித்துள்ளது.  இந்த எண்ணிக்கை உயரக்கூடும். 2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகளுக்காக 1 மாத காலத்திற்கு அவசர கால நிலையை ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி பிரகடனப் படுத்தியுள்ளார்.

No comments

Thank you for your comments