RTE -இலவச கட்டாயக் கல்வி திட்டம் சேர்க்கை நடைபெறுகிறது... விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி03-08-2021
வேலூர் :
வேலூர் மாவட்டம்- நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி திட்டம் - 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) இன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG வகுப்பில்) குறைந்த பட்சம் 25% இடஒதுக்கீடு 2021-2022 ஆம் கல்வியாண்டில் வழங்குதல் சார்பாக இணையதளம் வழியாக விண்ணப்பங்களை 05.07.2021 முதல் 03.08.2021 வரை பள்ளிக் கல்வி துறையின் இணையதளத்தின் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் இணையதள முகவரி rte.tnschools.gov.in ல் பதிவேற்றம் செய்ய கீழ்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பெற்றோர்கள் அந்தந்த ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் / ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் இணைய வழியில் விண்ணப்பிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
1. நலிவடைந்த பிரிவினர்- ஆண்டு வருமானம் (ரூபாய் 2,00,000) கீழ் உள்ளவர்கள்
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் - பி.சி , பி.சி.எம் , எம்.பி.சி , எஸ்,சி , எஸ்.சி.ஏ , எஸ்.டி
3. சிறப்பு பிரிவினர்கள்
ஆதரவற்றோர் (Orphan), மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை (Differently abled Child), மூன்றாம் பாலினத்தவர் (Transgender), எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தை (HIV affected), துப்புரவு தொழிலாளியின் குழந்தை (Child of Scavenger)
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்
1. இருப்பிடச் சான்றிற்கான ஆதாரம் ( குடும்ப அட்டை / ஆதார் அட்டை)
2. சாதிச் சான்று
3. ஆண்டு வருமானச் சான்று
4. பிறப்புச் சான்று
5. குழந்தையின் சமீபத்திய புகைப்படம் -2
குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளியில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 1ம் வகுப்பு சேர்க்கைக்கு 31.07.2021 அன்று 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம்.
No comments
Thank you for your comments