நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை:
அரசு பள்ளி மாணவ - மாணவியர், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவும்படி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படாத நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண், தற்காலிக சான்று நாளை வெளியிடப்படும் நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடால், அதிக மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அதிக மாணவர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையொட்டி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெயர் பட்டியலை, பள்ளிகளில் தயார் செய்து வருகின்றனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளம்
https://testservices.nic.in/NEET2021/Registration/Instruction.aspx


No comments
Thank you for your comments