குறைந்தபட்ச ஆதார விலையில் அரவை கொப்பரை கொள்முதல்
வேலூர்:
மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. தென் ஒருபகுதியாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மத்தி அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் (PSS) சென்ற ஆண்டு பச்சைப்பயிறு, துவரை, உளுந்து, தேங்காய் கொப்பரை ஆகிய விளை பொருட்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது நடப்பு நாட்காட்டி ஆண்டில் (2021-2022) விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரவைக் கொப்பரை நியாயமான சராசரி தரத்திற்கு (FAQ) கிலோ ஒன்றுக்கு ரூ.103.35 என்ற விலைக்கு மத்தி அரசு நிறுவனமான “NAFED” நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 1200 மெ.டன் வீதம் 2400 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர்-2021 வரை செயல்படுத்தப்படும்.
அதிகபட்சமாகநாள் ஒன்றுக்கு ஒருவிவசாயி 2500கி. கொண்டுவரலாம் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் வங்கிக்கணக்குப் புத்தகம், நிலச்சிட்டா, மற்றும் அடங்கல் சான்றிதழுடன் வேலூர் ஒழுங்முறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.விளை பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநர் வேளாண் வணிகம், செயலாளர் வேலூர் விற்பனைக்குழு, (0416 - 2220713) வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், (0416-2220083, 9789299174) மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (04171-2229573, 9751333818) ஆகியோரைஅணுகவும்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க தமிழக அரசு மேற்கொண்ட இம்முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டுக் கொள்கிறார்.
செய்திவெளியீடு : செய்திமக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்

No comments
Thank you for your comments