Breaking News

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடக்கம்...

சென்னை:

பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு நாளை தொடங்குகிறது. மேலும், ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

File Photo

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவீதம், பிளஸ்1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்களை கணக்கில் கொண்டு பிளஸ்2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு நாளை தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tneaonline.org  

www.tndte.gov.in

என்ற  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்படும். 

தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியிடப்படும்.  

செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். 

அக்டோபர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவிடுவதற்காக பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 


No comments

Thank you for your comments