அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்
சென்னை:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல், 2021-2022 கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நாளையிலிருந்து (26-7-2021) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதேபோன்று, பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் பதிவு நாளை (26-7-2021) முதல் தொடங்குகிறது.
பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவிடுவதற்காக பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றப்பின்னர் அவர்களுக்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடுவதற்கு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
அக்டோபர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments
Thank you for your comments