நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு...! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...!!
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ்குமார் வரவேற்றார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தயா. பேரின்பம் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில பொருளாளர் பாண்டுரெங்கன், துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்றநீதிபதியை கொண்டு விசாரணை செய்ய வலியுறுத்தியும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட பணத்தை மீண்டும் விவசாயிகளுக்கு மீட்டுத்தர வலியுறுத்தியும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்கும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து தரப்பட்ட அதிகாரிகளின் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கையாக வெளியிட வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களின் கிளை நிர்வாகிகள், சின்னஏட்டு , ஆசைத்தம்பி இளங்கோவன், கலியன், விக்னேஸ்வரன் மற்றும் பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுமுளை சொ.வீரராஜன் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments