ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் லெனினிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...
குமரி :
ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் லெனினிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் .
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 8மாதம் சிறையில் பாதிரியார் ஸ்டென் என்பவர் அடைக்கப்பட்டார் .
இவருக்கு சிறை நிர்வாகம் தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள் வழங்கப்படாமல் கொடுமைப்படுத்தப் பட்டு இறந்ததாக கூறப்படுகிறது
இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி லெனினிஸ்ட் சிவப்பு நட்சத்திரம் பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்
இந்திய தண்டனைச் சட்டத்திலுள்ள தேச துரோக சட்ட பிரிவை ரத்து செய்ய வேண்டும்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்
பெட்ரோல் டீசல் விலையை சமையல் எரிவாய்வு விலையை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பபட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் விளவங்கோடு தாலுகா செயலாளர் மரிய செல்வன் தலைமை தாங்கினார் .
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் தனேஷ் தனபால் பெண்கள் சங்க மாவட்ட தலைவர் சுசீலா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.எம்.பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments