Breaking News

இணையவழி கல்வி கற்க மாணவ,மாணவிகளுக்கு டேப் வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

பூவிருந்தவல்லி:

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ஆவடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை, கழக இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து திறந்து வைத்தார்.  மேலும், இணையவழி கல்வி கற்க +1, +2 மாணவ,மாணவிகளுக்கு டேப் உள்ளிட்ட நலத்திட்டங்களை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார்.

மாண்புமிகு தமிழக முதல்வர், தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ஆவடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தையை கழக இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து திறந்து வைத்தார். 


மேலும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி  நாசர் அவர்கள் ஏற்பாட்டில் ஏழை - எளிய மாணவ, மாணவிகளின் ஆன்லைன் கல்விக்கு உதவிடும் வகையில் 120  வரைப்பட்டிகைகளை  (TAB), கழக இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கினார். 


மேலும் மாணவச் செல்வங்களுக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்.


ஆவடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி மறைந்த மூவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன  ஆணை வழங்கினார். 

புதிதாக பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளோருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆவடி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் ஆவடி பகுதி பொறுப்பாளர்கள் ஜி.ராஜேந்திரன்,  ஜி.நாரயாணபிரசாத், பொன்.விஜயன்,  மற்றும் 1000த்திற்க்கு மேற்ப்பட்டோர்கள் பலர் கலந்துக் கொண்டனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்  பாக்கியராஜ்  சமீபத்தில் காலமானார். அவரது குடும்பத்தாருக்கு உதவிடும் வகையில் மாண்புமிகு அமைச்சர்  ஆவடி நாசர்  அவர்கள் ஏற்பாட்டில் ரூ.2 லட்சம் நிதியுதவியை கழக இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்கினார். 

 




No comments

Thank you for your comments